நற்செய்தியின் நம்பிக்கையை எங்கும் பரவச் செய்வோம் : திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

நற்செய்தி அதன் முழுமையில் வாழும்போது, ​​நம்மை நாமே மாற்றிக்கொள்வதில் மட்டுமல்ல, மாறாக, அதை எல்லோருக்கும் பரவும் நம்பிக்கையாக மாற்றுவதன் வழியாக விசுவாச வாழ்விற்குச் சான்று பகர்கின்றோம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 24, இப்புதனன்று, தான் வெளியிட்டுள்ள டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தி அறிவிப்புக்கான நமது பேரார்வம் இந்த வழியில்தான் பிறக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையின் சாட்சியாக இருப்போம்

இன்று நாம் கிறிஸ்தவர்களின் புனித சகாய அன்னையை நினைவு கூறுகின்றோம் என்றும், இந்நாளில் திருஅவை, அதன் பணியாளர்கள் மற்றும் நம்பிக்கையாளர்கள் அனைவரும், குறிப்பாக குடும்பங்கள், முதியவர்கள் மற்றும் நோயாளர்களுக்கு நம்பிக்கையின் சாட்சியாக இருக்க ஆறுதலின் அன்னை அருள்பொழிவாராக! என்றும் தனது இரண்டாவது குறுஞ்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.