அயலாருக்கு உதவ நீளும் கிறிஸ்தவர்களின் கரங்கள்

கிறிஸ்தவர்கள் துன்பத்தின் தீவிரத்தை ஒருபோதும் குறைவாக மதிப்பிட மாட்டார்கள் என்றும் துன்பத்தில் இருக்கும் மக்களுக்காக செபித்து அவர்களுக்கு உதவ தங்கள் கரங்களை கொடுப்பார்கள் என்றும் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 19 வெள்ளிக்கிழமை தன் டுவிட்டர் பக்கத்தில்  இவ்வாறு தன் கருத்துக்களைக் குறுஞ்செய்தியாகப் பதிவிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்பத்தின் தீவிரத்தை உணர்ந்தவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும் அவர்கள் கண்கள் எப்போதும் இறைவனை நோக்கியே இருக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

துன்பத்தின் தீவிரத்தை கிறிஸ்தவர்கள் ஒருபோதும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள், அவர்கள் தங்கள் துன்பத்தில் நம்பிக்கையோடு இறைவனை நோக்கிக் கண்களை உயர்த்தி, தங்களுக்காகவும், துன்பப்படுகின்றவர்களுக்காகவும் செபிக்கிறார்கள் என்றும், அவர்கள் கண்கள் விண்ணுலகை நோக்கி இருந்தாலும் கரங்களோ உடன்வாழும் துன்புறும் மனிதர்களுக்கு உறுதியுடன் உதவ நீளுகின்றன என்றும் அக்குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.