இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
செபமாலை மாதத்தின் 23-ஆம் நாளான இன்று, நாம் பாவத்திலிருந்து விலகி, இறைசித்தத்தை நிறைவேற்றிட தூய ஆவியின் துணை வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையரத் திருப்பலி முதல் வாசகத்தில், “ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோரின் நாட்டமெல்லாம் அந்த இயல்புக்கு உரியவற்றின் மீதே இருக்கும்; ஆனால் ஆவிக்குரிய இயல்புக்கு ஏற்ப வாழ்வோரின் நாட்டம் ஆவிக்கு உரியவற்றின் மீதே இருக்கும்.” என புனித பவுல் கூறுகிறார்.
உலக காரியங்களில் நம் கவனம் செலுத்துவதைவிடுத்து ஆண்டவருக்குரிய ஆன்மீக காரியங்களில் நம் கவனத்தை செலுத்த இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
நமது திருஅவை வரலாற்றில் முக்கிய நிகழ்வான நமது திருத்தந்தையின் ஆயர்களின் மாமன்றத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு, பங்கேற்று, இலக்கை நோக்கிப் பயணிக்க தூய ஆவியின் துணை வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
இந்த மாமன்றத்தில் விசுவாசிகள் தங்கள் கருத்துக்களை துணிச்சலாக எடுத்துரைக்கவும், அதை முற்சார்பு மன நிலையோடு ஏற்றுக் கொள்ளவும் தேவையான தூய ஆவியின் தூண்டுதல் மாமன்றத்தின் எல்லா நிலைகளில் இருக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
சென்ற வாரம் முழுவதும் நம்மை காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.