இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 85:12-ல், “நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.” என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.
நல்லதையே ஆண்டவர் நமக்கு அருள்வார். நல்லதே நடக்கும் என்று நம்பிக்கைக் கொண்டு தேவையற்ற அச்சத்தை நம் மனதிலிருந்து அகற்றிட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
““செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்: செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
எவரும் இரு தலைவர்களுக்குப் பணி செய்ய முடியாது என்ற உண்மையை உணர வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
ஆண்டவரின் திருக்காட்சிகளைக் காணும் பேறுபெற்றவரும், இன்றைய புனிதருமான சிலுவையின் புனிதர் கிளாராவிடமிருந்து செபத்தில் மனம் ஒன்றித்து ஆண்டவரோடு உரையாடும் உயர்ந்த பண்பை நாம் கற்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
அரசு அறிவித்த விதிமுறைகளை பொதுமக்கள் ஒழுங்காகக் கடைபிடித்து தொற்று நோயின் மூன்றாவது அலையின் தீவிரத்தை நன்கு குறைக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.