இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
நல்ல முறையில் பாவசங்கீர்த்தனம் செய்து தகுந்த முறையில் திருப்பலியில் பங்கெடுத்து ஆண்டவரின் திருவுடலை பெற வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
நாம் இன்று உட்க்கொண்ட இயேசுவின் திருவுடல், திரு இரத்தம் நமது பாவங்களை கழுவி சுத்திகரிக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இறைமக்கள் ஒவ்வொருவரும் தொற்று நோய்க்கு எதிரான கட்டுப்பாட்டு ஒழுங்கு முறைகளை ஆலயங்களில் முறையாகக் கடைபிடித்து அருட்தந்தைகளுக்கோ, இறைமக்களுக்கோ பாதகம் ஏற்ப்படாதவகையில் நடந்து கொள்ள இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
இறைப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள் மற்றும் கன்னியர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
அடக்கத் திருப்பலி இல்லாமல் தொற்று காலத்தில் மரித்த அனைத்து ஆன்மாக்களின் நித்திய இளைப்பாற்றிக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.