இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
ஊரடங்கு உத்தரவினால் நலிந்த சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் முன்னேற்றம் கண்டிட இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
பல நாள்களாக பள்ளி, கல்லூரிக்கு செல்லாமல் இருக்கும் மாணவர்கள் படிப்பில் ஆர்வமும், எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய நல்ல சிந்தனையும் பெற்றிட வேண்டி இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
ஊரடங்கு உத்தரவினால் வீட்டிலே இருப்பதால் பல பேர் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். அவர்கள் அனைவரும் அதிலிருந்து முற்றிலும் வெளிவர வேண்டி மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை குறைந்து வருவதற்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
பொது மக்களிடையே கொரோனா தொற்றுத் தடுப்பூசியை பற்றிய அச்சம் அகன்று அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டிய துணிவினை மக்களுக்கு இறைவன் அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.