இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
மாதாவின் வணக்க மாதத்தில், 30.05.2021 இன்று, விஷேசமாக திருச்சபைக்காக செபிப்போம். திருச்சபையில் தமது இறைப்பணியின் நிமித்தம் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்று மூவொரு கடவுள் பெருவிழாவைக் கொண்டாடும் நாம், தந்தை, மகன், தூய ஆவி என்னும் மூவொரு கடவுள் என்ற மறையுண்மையை முழுமையாக விசுவசிக்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
நம்மைப் படைத்துக் காத்துக் கொண்டிருக்கும் எல்லாம்வல்ல தந்தையை நாம் என்றும் புகழ்ந்து, துதித்து, ஆராதிக்க வேண்டி மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
நமக்காக பலியான மனுமகனாகிய நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவின் அளவில்லாத அன்பை நாம் மற்றவர்களுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
நம்மை இறைவழியில் இயக்கும் தூய ஆவியானவரின் துணையை நாம் என்றும் நாடிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.