இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி முதல் வாசகத்தில் புனித பவுலடியார்
‘மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது.’
என்று கூறுகிறார். இவற்றை நாம் ஒவ்வொருவரும் உள்ளத்தில் உணர்ந்து இறைவார்த்தையை நாள்தோறும் வாசித்து அதன்படி வாழ இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி பதிலுரைப்பாடல் பல்லவி திருப்பாடல் 119:165 -ல்
‘ உம் திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு நல்வாழ்வு உண்டு’.
என கூறியது போல நாம் அனைவரும் இறை வார்த்தையை கடைபிடித்து நல்வாழ்வு வாழ இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
தமிழ்நாட்டில் முக்கியமாக சென்னையில் மிக வேகமாகப் பரவி வரும் தொற்றின் வேகம் நன்கு குறைய இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
வரப் போகும் பொருளாதார வீழ்ச்சியினால் பாதிக்கப்படவுள்ள எண்ணற்ற குடும்பங்கள், ஆட்சியாளர்களின் கருணைப் பார்வை கிடைக்கப்பெற இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
கொரோனா நோயினால் சிகிச்சை பலனின்று உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.!

Comments are closed.