ஜெபமாலைக்கு வயது 2020 : அருள் நிறை மந்திர ஜெபத்திற்கு வயது 2020

ஆதிகால திருச்சபையில் துவக்கத்தில் இருந்தே இருந்து வந்த ஜெபங்கள்தான் பரலோக, அருள் நிறை மந்திரங்கள்…. ஆதிக் கிறீஸ்தவர்கள் சொல்லி வந்த ஜெபங்கள்தான் இவை…

வார்த்தை மனு உருவாக உதித்தது அருள் நிறை மந்திரம் என்னும் மங்கள் வார்த்தை ஜெபத்தால்தான்… “ இதோ ஆண்டவருடைய அடிமை… உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும் “ ( லூக்காஸ் 1: 38) என்று நம் அன்னையை சொல்ல வைக்க உதவியதும் இந்த மங்கள் வார்த்தையே…

இந்த ஜெபங்கள் மட்டுமல்ல விசுவாசப்பிரமாணமும் முதல் போப் ஆண்டவரான புனித இராயப்பரின் காலத்திலேயே உதித்துவிட்டது…

ஆதிக்கிறிஸ்தவர்கள் சொல்லி வந்த எளிய ஆனால் வலிமையான ஜெபங்கள்தான் இந்த ஜெபங்கள்… அதுவும் அவர்கள் சொல்லிவந்த காலம் வேத கலாபனையின் காலம்… முதல் மூன்று நூற்றாண்டுகள் (300 ஆண்டுகள்) அதன் பின்பும் அவர்களால் சொல்லப்பட்டுவந்தது… ஆனால் அவைகளின் எண்ணிக்கை அவரவர்கள் இஷ்ட்டப்படி…

ஆனால் நாம் வைத்திருக்கும் வடிவத்தில் 53- மணிகளாக உருமாற்றம் பெற்று அதுவும் அதை தேவ மாதாவே நேரடியாக வந்து புனித சுவாமி நாதருக்கு கொடுத்த ஆண்டு 1214. தப்பரைகளைகளின்(ஆல்பீன்ஜியஸ்) தாக்கத்தால் சிக்கித் தவித்த திருச்சபையை காக்கவும், மக்களை பாவத்திலிருந்தும், ஆன்ம ஆபத்திலிருந்தும் காக்கவும் தேவ அன்னையால் கொடுக்கப்பட்டது..

திருச்சபை எப்போதெல்லாம் தப்பரைகளாலும், பிரிவினையாலும் தாக்கப்பட்டதோ அப்போதெல்லாம் ஜெபமாலை எழுச்சி பெற்றுதான் அவைகளிலிருந்து திருச்சபையை காத்து வந்துள்ளது… இதுதான் நம் திருச்சபையின் வரலாறு…

பாவிகளை நரகத்திலிருந்து காப்பாற்றவும், உத்தரிக்கும் ஆன்மாக்களை மோட்சம் சேர்க்கவும் பாத்திமா சிறுமிகளான லூசியா, ஜெசிந்தா, பிரான்சிஸ்க்கு தேவ அன்னை நேரடியாக காட்சி கொடுத்து கற்றுத்தந்த ஜெபம்தான் “ ஓ ! என் இயேசுவே…ஜெபம்.. “ வருடம்- 1917.

ஜெபமாலையின் வலிமை அதிகம்…அது அவற்றை ஜெபிக்கும்போதுதான் உணர முடியும்… அளவற்ற ஆற்றலை தன்னுள்ளே அடக்கிக் கொண்டு மிக எளியாக காட்சிதரும் ஜெபமே ஜெபமாலை… குடும்ப மற்றும் குழு ஜெபமாலைக்கு ஆற்றல் இன்னும் அதிகம்.. ஜெபமாலை பிசாசுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம்….நம் ஆன்மாவை பாவத்திலிருந்தும் நம்மை ஆபத்துகளிலிருந்தும் பாதுகாக்கும் கருவி ஜெபமாலை…

ஆனால் அதை சொல்வதற்குத்தான் பல கத்தோலிக்கர்களுக்கும், கத்தோலிக்க குடும்பங்களுக்கும் நேரம் இல்லை என்பது வேதனை…

சின்னத்திரை ஆட்சி செய்யும் குடும்பங்களில்… அது மேலும் கவலைக்கிடம்… பிள்ளைகளை படிக்க வைக்க…டியூசனுக்கு அனுப்ப… மற்ற வகுப்புகளுக்கெல்லம் அனுப்ப நேரம் ஒதுக்கும் கத்தோலிக்க குடும்பங்கள் இந்த எளிய வலிமையான ஜெபங்களை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கவும், அவர்களை வைத்து ஜெபிக்கவும் நேரம் ஒதுக்க அவர்களுக்கு நேரம் இல்லை..

ஜெபித்தால் குடும்பத்தில் எல்லாம் சரியாகிவிடும்…கிடைக்க வேண்டியது அனைத்தும் கிடைத்து விடும்… ஆனால் ஜெபிக்க எளிதில் விட்டுவிடுவானா சாத்தான்…

விஜய் டிவி…பாரு… சன் டிவி பாரு…அந்த புரோகிராம் சூப்பர் அதை பாரு…இந்த புரோகிராம் சூப்பர் இதைப்பாரு… அந்த சீரியல்..இந்த சீரியல்… என்று நம் குடும்பங்களை ஒருவித மயக்கத்திலேயே வைத்துருப்பதில் அவன் குறியாக இருக்கிறான்..நம் குடும்பங்களும் அவனுக்கு அடிமையாக கிடக்கின்றன…

Comments are closed.