இயேசுவின் விண்ணேற்றம் நம் பார்வையை விண்ணகத்தை நோக்கித் திருப்புகிறது!
இயேசுவின் தூய்மைமிகு விண்ணேற்றப் பெருவிழா நம் பார்வையை விண்ணகத்தை நோக்கித் திருப்புகிறது என்றும், இது மண்ணகத்தில் இயேசு கிறிஸ்து நமக்கு ஒப்படைத்த பணியை திறம்பட ஆற்றவேண்டும் என்பதை நினைவூட்டுகிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
மே 29, வியாழக்கிழமை இன்று, இயேசுவின் தூய்மைமிகு விண்ணேற்றம் என்ற ஹாஷ் டாக்குடன் வழங்கியுள்ள தனது டுவிட்டர் செய்தியில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
மேலும் விண்ணேற்றமடைந்துள்ள இயேசு நமக்கு வழங்கியுள்ள மண்ணக வாழ்வுக்குரிய பணியைத் திறம்பட ஆற்றுவதில் நாம் உண்மையுள்ளவர்களாக விளங்கிட தூய ஆவியார் நமக்கு உதவுவாராக என்றும் உரைத்துள்ளார்.
இயேசுவின் விண்ணேற்றம் உயிர்ப்புப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு நாற்பதாம் நாளில் வருகிறது. புனித ஜான் கிறிசோஸ்தம் மற்றும் புனித அகுஸ்தினார் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இந்த விழாவின் பரவலில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் நிசேயாவின் புனித கிரிகோரி தான் என்றும் கூறப்படுகிறது. மேலும் இப்பெருவிழா வியாழக்கிழமை வருவதால், பல நாடுகளில், இந்தப் பெருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.
Comments are closed.