பகை உள்ளத்தோடு நற்கருணை வாங்கின வியாதிக்காரனுக்கு நேர்ந்த நிர்ப்பாக்கிய மரணம்!

இஸ்பானிய தேசத்திலுள்ள கொர்டோவா பட்டணத்தில் இரண்டு நண்பர்களுக்கிடையே மிகுந்த பகை உண்டாயிருந்தது . அவர்கள் பகையை விட்டுச் சமாதானமாய்ப் போவதற்குக் குருக்கள் மற்றும் பெரியோர்களும் எத்தனை புத்தி சொன்னாலும் அவர்கள் கேட்கவில்லை . இந்த இரண்டு பேர்களுள் அதிக பகையோடு உள்ளவன் கடின வியாதியில் விழுந்து அவஸ்தையாயிருந்தான் . அச்சமயத்திலே ஒரு சேசு சபை குருவை அழைப்பித்து அவரிடத்தில் தான் பாவசங்கீர்த்தனம் செய்யவேண்டுமென்றான் .

அந்த குருவானவர் அவனைப் பார்த்து உன்னிடத்திலுள்ள பகையை விட்டு விரோதியோடு நீ சமாதானமாய்ப் போன பிறகு பாவசங்கீர்த்தனம் செய்யலாம் . அதற்குச் சம்மதியாதிருந்தால் பாவசங்கீர்த்தனம் செய்யாமல் சாவது தவிர உன் சரீரத்தை மந்திரித்த கல்லறையில் வைக்கவும் கூடாது என்றார் . வியாதிக்காரன் ” என் எதிராளி இங்கே இருந்தால் சமாதானமாய்ப் போவதற்கு தயாராயிருக்கிறேன்” . என்றான் .

குருவானவர் மடத்துக்குப் போன அன்றிரவே இரு வாலிபர்கள் அந்தக் குருவிடம் போய் அவரைப் பார்த்து ” நீர் தேவநற்கருணைப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சர்வேசுரனுக்கு ஒரு ஊழியம் செய்ய எங்களோடு கூட வாரும் ” என்று மன்றாடினார்கள் . அப்படியே உடனே வந்த குருவானவரை முன் சொல்லப்பட்டவனுடைய உடல் இருந்த கல்லறைக்கு அழைத்துக் கொண்டு போனார்கள் . அங்கே சேர்ந்தவுடன் அவர்கள் ” நேற்று இறந்தவன் தன் விரோதியைப் பார்த்து எனக்கும் உனக்கும் பகையில்லை நீ செய்த குற்றமெல்லாம் பொறுத்தேனென்று வாயினால் மாத்திரம் சொன்னானேயல்லாமல் மனதால் பொறுக்கவில்லை . அந்த பகையோடு பொய்யான பாவசங்கீர்த்தனம் செய்து சாவான பாவத்தோடு நன்மை வாங்கினான் .

ஆனால் தேவநற்கருணை உள்ளே போகாமல் இந்த மட்டும் அவன் நாக்கின் மேல் இருக்கிறது . அதைத் தேவரீர் இப்போது எடுத்துக்கொண்டு போக வேண்டும் ” என்று சொன்னார்கள். உடனே அவர்கள் கட்டளைப்படியே கல்லறை தானே திறந்தது . இறந்தவனுக்கு உயிர் வந்து எழுந்திருந்து நாவை நீட்டினான் . அதன்மேல் இருந்த தேவநற்கருணையைக் குருவானவர் பயத்துடன் கை நடுங்க எடுத்துப் பாத்திரத்துக்குள்ளே வைத்தார் .

பிறகு அந்த இரண்டு பேரும் பூமியைக் காலால் உதைத்தவுடன் பூமி பிளந்து இறந்து போனவனுடைய உடல் அதில் விழுந்து மறைந்து போயிற்று . அந்த இரண்டுபேரும் எரியும் மெழுகுத் திரியைக் கையில் பிடித்துக் கொண்டு மகா தாழ்ச்சியோடு குருவானவரோடு கூடக் கோவில் மட்டும் போன பிறகு திடீரெனக் காணாமல் மறைந்து போனதைக் குருவானவர் கண்டு அவர்கள் வானதூதர்கள் என்று அறிந்து கொண்டார்.

கிறிஸ்தவர்களே ! சாவானபாவத்தோடு தேவநற்கருணை வாங்குவது மாபெரும் பாதகமாகும் . உங்களிடத்தில் பகை உண்டானால் மட்டுமல்ல, மனதாலும் சமாதானமாய்ப் போனபிறகு மாத்திரம் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து நன்மை வாங்க வேண்டும் . விரோதி பொல்லாதவன் நான் அவனோடு சமாதானமாய்ப் போவதற்கு அவன் தகுதியுடையவன் அல்ல என்று சொல்லிச் சில பேர்கள் சமாதானமாய்ப் போகமாட்டார்கள் . சமாதானமாய்ப் போக மனமில்லாமல் பாவசங்கீர்த்தனம் செய்பவன் பாவ மன்னிப்பு அடைவதில்லை.

( இன்று உயிருள்ள இயேசுவின் திருவுடலான திவ்ய நற்கருணைக்கு நாம் தகுந்த ஆராதனை செலுத்துகிறோமா, சிலர் செருப்பு காலோடு தான் திருப்பலியில் பங்கு பெறுகிறார்கள் எழுந்தேற்ற நேரத்தில் கூட செருப்பை கழற்றுவது இல்லை ஏன் நற்கருணை நாதரை தன் உள்ளத்தில் வாங்கும் போது கூட செருப்பை கழற்றுவது இல்லை ஏன் என்றால் காலில் அழுக்கு ஒட்டிக் கொள்ளுமாம், ஒரு சிலர் செருப்பை தன் முன்னே கழற்றி விட்டு, திவ்ய திருப்பலியில் பங்கு பெறுகிறார்கள்,

Comments are closed.