நற்செய்தியைப் பறைசாற்றுவதில் துணிவும், மகிழ்வும்

திருத்தூதர் பணிகள் நூலை மையப்படுத்தி தான் வழங்கிவந்த புதன் மறைக்கல்வி உரைகளை, சனவரி 15, இப்புதனன்று நிறைவு செய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதர் பணிகள் நூல் வெளிப்படுத்தும் மகிழ்வையும், துணிவையும் தன் டுவிட்டர் செய்தியின் கருத்தாக வெளியிட்டார்.

நற்செய்தி இவ்வுலகில் எவ்விதம் பரவியது என்ற வரலாற்றை, கடந்த சில மாதங்களாக, பின்னோக்கிப் பார்த்த நாம், அந்த நற்செய்தியை தொடர்ந்து பறைசாற்றும் பணியாளர்களாக நம்மை மாற்றும்படி தூய ஆவியாரை வேண்டுவோமாக என்று தன் மறைக்கல்வி உரையின் இறுதியில் கூறிய திருத்தந்தை, அதே எண்ணங்களை தன் டுவிட்டர் செய்தியாகவும் வெளியிட்டார்.

“நற்செய்தியை அறிவிப்பவர்களாக அழைக்கப்பட்டுள்ள நாம், அப்பணியை, துணிவோடும், மகிழ்வோடும் ஆற்றுவதற்கு, தூய ஆவியார் நம்மில் புத்துணர்வளிப்பாராக” என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்திருந்தார், திருத்தந்தை.

Comments are closed.