அன்பின் புரட்டஸ்தாந்து பிரிவினை சபைகளே உங்களுக்கு இது

ஞாயிறு ஒன்று கூடி ஆராதனை ( பாடல் பாடி, பைபிள் வாசிப்பதை ஆராதனை என நீங்களே சொல்லிக் கொள்கிறீர்கள்…அதை வேறு பதிவில் பார்ப்போம்) செய்யவேண்டும் என்ற ஒரு கட்டளை பைபிள் இல்லை..
உண்மையில் இது ஒரு கத்தோலிக்க பாரம்பரியம்..

ஒரு சபை பாஸ்டர் சொன்னார் ஞாயிறு விடுமுறை என்பதால் அன்று ஆராதனை செய்கிறோம் என்பதாக…
ஞாயிறு விடுமுறை என்ற வழக்கம் வந்ததே திருச்சபை “ஞாயிறு திருப்பலி” செய்வதற்காகத்தான்…
இஸ்லாமிய நாடுகளில் வெள்ளி விடுமுறை…இஸ்ராயேல் யூத நாட்டில் வெள்ளி சனி விடுமுறை..

ஆக எல்லாம் பைபிள் அடிப்படையில் அல்லது பைபிளில் உள்ளதா என கேட்கும் குழப்பும் நீங்கள் கடவுளின் கட்டளை சனிக்கிழமை என்றிருக்க எப்படி ஞாயிறு ஆராதனை செய்கிறீர்கள்?????

ஞாயிறு கத்தோலிக்க பாரம்பரியம்….
உங்களுக்குத்தான் பாரம்பரியம் வேண்டாமே….பைபிளில் எங்கே கட்டளை உள்ளது ஞாயிறு ஆராதனை செய்ய…

Comments are closed.