இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
19.10.2024 துயர்நிறை மறையுண்மைகள்
.
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்று திருச்சபையானது நற்செய்தியாளரான தூய லூக்காவின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இவர்தான் மூன்றாம் நற்செய்தி அல்லது இரக்கத்தின் நற்செய்தி என்று அழைக்கப்படும் லூக்கா நற்செய்தி நூலையும், திருத்தூதர் பணிகள் நூலையும் எழுதியவர். புனித லூக்காவை திருச்சபைக்குத் தந்தருளின நம் இறைவனுக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்
“அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நமது திருச்சபைக்கு இறை அழைத்தல் பெருக வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
கத்தோலிக்க திருஅவை அக்டோபர் மாதத்தை ஜெபமாலை மாதமாக அனுசரித்து வருகிறது. அக்டோபர் மாதம் ஜெபமாலை அன்னைக்குரிய மாதமாகும். அலகையை அகற்றிட அன்னை அளித்த செபமாலையை இந்த மாதம் முழுவதும் செபிப்போம். தினமும் நான்கு செபமாலையாவது செபிக்க உறுதி கொண்டு இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் மற்றும் அன்றாட அலுவல்கள் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்துக்கு ஒப்புக்கொடுக்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
Comments are closed.