அக்டோபர் 19 : நற்செய்தி வாசகம்

நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்

நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை மானிட மகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக்கொள்வார். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார்.

மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார்.

தொழுகைக்கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதில் அளிப்பது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

————————————————————–

ஏற்றுக் கொள்பவர், ஏற்றுக்கொள்ளப்படுவார்

பொதுக் காலத்தின் இருபத்து எட்டாம் வாரம் சனிக்கிழமை

I எபேசியர் 1: 15-23

II லூக்கா 12: 8-12

ஏற்றுக் கொள்பவர், ஏற்றுக்கொள்ளப்படுவார்

சிறுவனின் சாட்சிய வாழ்வு:

கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்ததற்காக ஒரு குடும்பத்தில் இருந்த தந்தையும் தாயும் மதவெறியர்களால் கொல்லப்பட்டார்கள். இப்போது எஞ்சியிருந்ததோ அந்தக் குடும்பத்தில் இருந்த சிறுவன் மட்டுமே!

மதவெறியர்கள் அவனைப் பிடித்து, “கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்தால் என்ன நடக்கும் என்று உன் பெற்றோர் உன்னிடம் சொல்லியிருக்கின்றார்களா?” என்று மிரட்டும் தொனியில் கேட்டார்கள். “கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்தால் உயிரையும் இழக்க நேரிடும் என்று சொல்லியிருக்கின்றார்கள்” எனப் பேசத் தொடங்கிய சிறுவன், “ஆனாலும், எக்காரணத்தைக் கொண்டும் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதை மட்டும் நிறுத்தக்கூடாது என்றும் அவர்கள் சொல்லியிருக்கின்றார்” என்று துணிவோடு அவர்களுக்கு பதிலளித்தான்.

சிறுவன் இவ்வாறு துணிவோடு பதிலளித்தைக் கேட்டு, மதவெறியர்கள் மிரண்டு போனார்கள்.

எக்காரணத்தைக் கொண்டும் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்வதை நிறுத்தக் கூடாது என்று இந்த நிகழ்வில் வரும் சிறுவனும் அவனுடைய பெற்றோரும் கிறிஸ்துவின்மீது கொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தது நமக்கெல்லாம் பெரிய பாடம். இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்கள் கிறிஸ்துவால் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்ற சிந்தனையைத் தருகின்றது. அதுகுறித்து நாம் சிந்திப்போம்.

Comments are closed.