உலக மனித உரிமைகள் தினம் – திருத்தந்தையின் டுவிட்டர்

மனிதர்கள், தங்கள் முன்னேற்றத்தின் எந்நிலையிலும், சூழலிலும் புனிதத்தன்மையும், மீற முடியா உரிமைகளையும் கொண்டவர்கள் என்ற கருத்தை வலியுறுத்தி, இச்செவ்வாயன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

‘முன்னேற்றப்பாதையில் எந்தச் சூழலிலும், நிலையிலும் மனிதர்கள், புனிதத்தன்மை கொண்டவர்கள், மற்றும், மீற முடியாத உரிமைகளை உடையவர்கள். இந்த நம்பிக்கை பொய்க்குமானால், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, உறுதியான மற்றும் நிலையான அடிப்படை இல்லாமல் போய்விடும்’ என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

டிசம்பர் 10, இச்செவ்வாய்க்கிழமையன்று உலக மனித உரிமைகள் தினம் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி, மனித உரிமைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து சிறப்பாக வலியுறுத்தியது.

மேலும், தங்களது ‘அத் லிமினா’ சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆயர்கள் குழு ஒன்றை, இச்செவ்வாய்க்கிழமையன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.