கடவுளுடன் கொண்டிருக்கும் உறவு அதிக கனி தரும் – திருத்தந்தை

நிலத்தைப் பயிரிட்டுப் பராமரிப்பது போல கடவுளுடன் கொண்டிருக்கும் உறவையும் பராமரிக்கவேண்டும் என்று டுவிட்டர் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 14, சனிக்கிழமையன்று, கடவுளோடு நாம் கொண்டுள்ள உறவு கனி தரும் உறவாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி அனுப்பிய டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நன்கு பண்படுத்தப்பட்டு பயிரிட்டுப் பராமரிக்கப்படும் நிலம் எப்படி அதிக விளைச்சலைத் தருகின்றதோ அதுபோல, நமது ஆன்மிக ஆரோக்கியத்தை வளர்த்து கடவுளுடன் கொண்டிருக்கும் பண்பட்ட உறவை வலுப்படுத்தும் போது நமது வாழ்வும் கனி தரும் வாழ்வாக அமையும் என்பதை  அக்குறுஞ்செய்தி உணர்த்துகின்றது.

Comments are closed.