மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவர்

வத்திக்கான் நிறுவனங்கள் அனைத்தும் திருப்பீடத்தின் பொருளாதாரத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் வருகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டிசம்பர் 06, இவ்வெள்ளியன்று வெளியிட்ட Motu Proprio அறிக்கையில் அறிவித்துள்ளார்.

திருப்பீடத்தைக் குறிக்கின்ற நிதியமைப்புகள், நிறுவனங்கள், கணக்கியல் அமைப்புகள்  போன்றவை உட்பட நீதித்துறை சார்ந்தவர்கள் குறித்து சுயவிருப்பத்தினால் வெளியிடும் Motu Proprio அறிக்கையில், திருப்பீட நிறுவனங்களுக்குள் உள்ள அமைப்புகள், நிர்வாகத் தனித்தியங்கும் சில சலுகைகளைக் கொண்டிருக்கின்றன என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

இப்புதிய விதிமுறைகள் வத்திக்கான் நாட்டிலுள்ள அமைப்புகளுக்கும் பொருந்தும் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார்” என்ற லூக்கா நற்செய்தி (16,10) வரிகளை, இவ்வறிக்கையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, பொருளாதார அவையின் எண் 1§1ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறையின்படி பதிவுசெய்யப்பட்ட திருப்பீடம் மற்றும், வத்திக்கான் நாட்டில் தலைமையகங்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை பொருந்தும் என்று கூறியுள்ளார்.

இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவைகள், டிசம்பர் 8, வருகிற வியாழன் முதல் மூன்று மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என திருத்தந்தையின் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Motu Proprio அறிக்கையில் எட்டு எண்கள் உள்ளன, அதில் மூன்றாவது எண், பொருளாதாரம் மற்றும், நிதி சார்ந்த விவகாரங்களை மேற்பார்வையிடுவது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்துக் கூறுகின்றது, இதனைப் பொருளாதாரச் செயலகம் மேற்பார்வையிடும் மற்றும், அது குற்றவியல் நடவடிக்கைகளைத் தடுத்தல் மற்றும் அவற்றுக்கெதிராய்ச் செயல்படும் எனவும் கூறுகின்றது.

Comments are closed.