பண்டத்தரிப்பு புனித பத்திமா அன்னை ஆலயம் பெருவிழா

செபியுங்கள் அதிகம் செபியுங்கள்; செபமாலை செபியுங்கள்…” என்று பத்திமா பத்திமா பதியில் திருக்காட்சி கொடுத்த மரியன்னையின் திருக்காட்சி திருவிழா இலங்கை தீவின் யாழ் மறைமாவட்டத்தின் பிரசித்திபெற்ற திருத்தலமாகிய பண்டத்தரிப்பு புனித பத்திமா அன்னை திருத்தலத்தில் இன்று (13/05/2022) வெள்ளிக்கிழமை நினைவு கூரப்பட்டது. யாழ் மேற்றானியார் அதிவணக்கத்திற்குரிய ஆயர் பேரருட்திரு யஸ்ரின் B ஞானப்பிரகாசம் அடிகளாரால் திருநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, திருப்பலி நிறைவில் திருச்சுருப பவனியும், திருச்சுருப ஆசீரும் வழங்கப்பெற்றது. நாட்டினுடைய அசாதாரண சூழ்நிலைகளின் மத்தியிலும் பத்திமா அன்னையின் பாதுகாவலை நோக்கி பெருமளவான இறைமக்கள் வருகை தந்திருந்தனர். அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களது பங்குபற்றுதலுடன் அன்னையின் திருநாள் இடம்பெற்றிருந்தது. பல்வேறுபட்ட நெருக்கடியான சூழ்நிலைகளின் மத்தியிலேயும் அன்னையின் திருக்காட்சி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செவ்வனே நெறிப்படுத்தி வழிப்படுத்தி முழுமைப்படுத்திய திருத்தல பரிபாலகர் அருட்திரு கலாநிதி மைக்கல் APR சவுந்தரநாயகம் அடிகளார் சிறப்பிற்குரியவர். புனித பத்திமா அன்னையின் வல்லமை பொருந்திய பரிந்துரையால் திருமகன் இயேசு எமது நாட்டினுடைய துயர் நீக்கி அமைதியை நிலைநாட்ட அனைவரும் செபிப்போம்..

Comments are closed.