இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி முதல் வாசகத்தில்,
“கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்; என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்.” என எசாயா கூறுவதை நாம் வாசிக்கின்றோம்.
நம் ஒவ்வொருவரையும் இறைவன் அழைத்திருக்கின்றார். அவரது அழைப்பை, அழைப்பின் நோக்கத்தை நாம் அறிய வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி பதிலுரைப்பாடல் பல்லவி திருப்பாடல் (71:15)-ல், “என் வாய் நாள்தோறும் உமது மீட்பை எடுத்துரைக்கும்.” என கூறப்பட்டுள்ளது.
ஆண்டவரின் வார்த்தையை, நற்செய்தியை நம்மால் இயன்ற வழிகளிவ் எல்லாம் அறிவிக்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சி பெற்றுள்ளார்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
“நமது நற்செயல்களால் கடவுளை மாட்சிப்படுத்துவோம்.” (மத்.5: 16) என மத்தேயூ நற்செய்தி கூறுகிறது. நமது நற்செயல்களால் நாம் இறைவனை மாட்சிப்படுத்த இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
இந்த புனித வாரத்தில் நாம் நமது செப,தப முயற்சிகளில் சிறந்து விளங்க வ்ண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.