இலங்கையில் மருத்துவத்துறையில் புதியதொரு வியக்கதகு தமிழ்மாணவியின் சாதனை

இலங்கையின் மருத்துவ துறையில் வைத்தியசாலை இரத்ததான முகாம் ,மற்றும் குருதிப்பரிசோதனைகளான நீரழிவு,கொழுப்பு,தைரொயிட் போன்றவற்றுக்கான குருதி மாதிரிகளை நோயாளரிடமிருந்து வேகமாக சேகரிக்க மருத்துவத்துறை சார்ந்த தாதியர் ,வைத்தியர் உதவியில்லாமல் நாமே எமக்கு குருதிகளை பெற ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்துள்ளார்,

இப்படியொரு இயந்திரத்தினை கண்டுபிடித்தது ஏற்கனவே அனுபவம் உள்ள ஒரு வைத்தியசாலை உத்தியோகத்தர் என யாரும் கருத வேணாம் .வவுனியா சைவப்பிரகாச மகளிர் பாடசாலை உயர்தர தொழினுட்ப பிரிவு ரோகிதா மாணவியே ஆவார்.இம் மாணவியின் தந்தை கூட வன்னி இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர் அப்படியிருந்து மாணவியின் விஞ்ஞான தொழினுட்ட ஆர்வமும் தேடலும் தாயின் உதவியும் சேர்ந்து இப்படியொரு இயந்திரத்தை உருவாக்க உதவியுள்ளது.

இவ் ரோபோ இயந்திரம் எமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வீணாக நினைத்து எறியும் கழிவுப்பொருட்களே ஆகும்,ஜப்பான் நாட்டில் கழிவுப்பொருட்களை வீணாக்காமல் அதை கூட ஒரு பயன்பாடாக மாற்றும் தொழினுட்ப முறையை போன்ற இம்மாணவியின் சிந்தனை தூண்டல் எத்தனை அறிவுபூர்மானது.

அந்த மாணவிக்கும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர் குழாமிற்கும் நன்றிகளை தெரிவிக்கின்றோம். இந்த மாணவி ஏனைய மாணவர்களுக்கு முன்மாதிரியாக செயற்பட்டு பெண்களாலும் முடியும் என வெளிப்படுத்தியுள்ளார்

Comments are closed.