அன்னை மரியா மற்றும் அகுஸ்தீனாரை பிரதிபலிக்கும் இலச்சினை
புதிய திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் எடுத்துள்ள இலச்சினை அன்னை மரியா மீது அவர் கொண்டுள்ள பக்தியையும் புனித அகுஸ்தீனாரிடமிருந்து அவர் பெற்றுள்ள தூண்டுதல்களையும் வெளிப்படுத்துவதாக உள்ளது என திருப்பீட தகவல் தொடர்புத்துறை அறிவித்துள்ளது.
வழக்கமாக திருத்தந்தையர்களின் ‘Coat of Arms’ எனப்படும் இலச்சினை அனைத்திலும் காணப்படுவதுபோல் திருத்தந்தையர் அணியும் ஆயருக்குரிய மகுடம் போன்ற தொப்பியும், இரு திறவுகோல்கள் ஒன்றுக்கொன்று குறுக்காக வைக்கப்பட்டிருப்பதுடன், மேல்பகுதியின் இடதுபுறத்தில் இளநீல பின்னணியுடன் லீலி மலர் அடையாளம் வெள்ளி நிறத்திலும், கீழே வலது புறத்தில் இளமஞ்சள் நிறத்தின் பிண்னணியில் ஒரு சிகப்பு நிற புத்தகத்தின் மீது ஓர் அம்பால் துளைக்கப்பட்ட சிகப்பு இதயம் அதன் மேல் முனையில் சுடரைத் தாங்கியதாக உள்ளது.
அந்த இலச்சினையின் அடிப்பகுதியில் திருத்தந்தை 14ஆம் லியோவின் “ஒருவராக இருப்பவரில் நாமனைவரும் ஒன்றாய்” என்ற விருதுவாக்கு எழுதப்பட்டுள்ளது.
Comments are closed.