மே 11 : நற்செய்தி வாசகம்
நான் என் ஆடுகளுக்கு நிலைவாழ்வை அளிக்கிறேன்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 27-30
இயேசு கூறியது: “என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள மாட்டார். அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
Comments are closed.