திருத்தந்தைக்குரிய பணி பொறுப்பேற்கும் திருப்பலி மே 18ல்

புதிய திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களின் மே மாதத்திற்குரிய நிகழ்ச்சிகளை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

மே மாதம் 9ஆம் தேதி காலையில் கர்தினால்களுடன் சிஸ்டைன் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், பத்தாம் தேதி சனிக்கிழமையன்று  கர்தினால்களை வத்திக்கானில் சந்தித்து உரையொன்று வழங்கினார்.

11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று புனித பேதுரு பெருங்கோவில் மேல் மாடத்திலிருந்து நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரையை வழங்குவார் புதிய திருத்தந்தை.

12ஆம் தேதி திங்கள்கிழமையன்று உலக சமூகத்தொடர்புத் துறையினருடனான சந்திப்பு இடம்பெறும்.

16ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்திற்கான பல்வேறு நாடுகளின் தூதுவர்களை சந்திக்கும் திருத்தந்தை, மே 18, ஞாயிற்றுக்கிழமையன்று புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு நிறைவேற்றும் திருப்பலியில் திருத்தந்தைக்குரிய பணிகளின் பொறுப்பை ஏற்பார்.

அதன்பின் 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று உரோம் நகரின் புனித பவுல் பெருங்கோவிலின் பொறுப்பை எடுப்பார் திருத்தந்தை 14ஆம் லியோ.

மே மாதம் 21ஆம் தேதி புதிய திருத்தந்தையின் முதல் புதன் மறைபோதகம் இடம்பெறும்.

அதே வாரம் மே மாதம் 24ஆம் தேதி சனிக்கிழமையன்று திருப்பீடத்தின் பல்வேறு துறைகளின் உயர்மட்ட அதிகாரிகளையும், வத்திக்கான் பணியாளர்களையும் சந்தித்து உரை வழங்குவார் புதிய திருத்தந்தை 14ஆம் லியோ.

Comments are closed.