நம்மை உயர்த்திப் பிடிக்கும் கடவுளின் அன்பும் அருளும்
நம்மைக் காப்பாற்ற எப்போதும் நம் அருகில் இருக்கும் கடவுள் மீதான நமது நம்பிக்கையைப் புதுப்பிக்க, தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு வாசகங்கள் அழைப்பு விடுக்கின்றன என்றும், வாழ்வில் சோதனைகள் மற்றும் துன்பங்கள் அதிகமாகும்போது கடவுளின் அருளும் அன்பும் நம்மை இன்னும் நெருக்கமாகப் பிடித்து வாழ்வில் உயர்த்துகின்றன என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 6, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற நோயாளர்கள் மற்றும் உலக நலவாழ்வுக்கான யூபிலி நாள் திருப்பலியினை முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கருத்துக்களை எடுத்துரைத்தார் புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிகெல்லா.
நாடுகடத்தப்படுதல்,வன்முறை, பாவம், எதார்த்த வாழ்வு ஆகியவை நம் கதவருகில் நின்று தட்டும் கடவுளைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும், நாம் எப்போது அவரை உள்ளே நுழைய நாம் அனுமதிக்கின்றோமோ அப்போதே அவர் நம் வாழ்க்கைக்குள் நுழையத் தயாராக இருக்கின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
Comments are closed.