திருஅவை என்பது ஒரு புதிய மற்றும் ஒப்புரவாக்கப்பட்ட மனிதகுலம்!
துடிக்கும் இதயம் உடல் முழுவதும் இரத்தத்தை செலுத்துவது போல, நீங்கள் திருஅவைக்கு மட்டுமல்ல, அதன் உலகளாவிய பரிமாணங்களுக்கும் உங்களை அர்ப்பணிக்க விரும்புகிறீர்கள்” என்றும், “திருத்தந்தையின் நோக்கங்களை, குறிப்பாக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான நோக்கங்களை உங்கள் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 3, வியாழக்கிழமை இன்று, கத்தோலிக்க அருங்கொடைசார் புதுப்பித்தல் அனைத்துலக சேவை அமைப்பின் யூபிலி ஆண்டுத் திருப்பயணத்தின் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை.
“உயிர்த்தெழுந்த இயேசு ஆண்டவரின் கொடையான தூய ஆவியார், ஒன்றிப்பு, நல்லிணக்கம் மற்றும் உடன்பிறந்த உறவின் தோற்றுவாயாக (source) இருக்கிறார்” என்றும், “திருஅவை என்பது ஒரு புதிய மற்றும் ஒப்புரவாக்கப்பட்ட மனிதகுலம்” என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“இந்த அனுபவம் உங்களுக்கானது மட்டுமன்று, மாறாக, எல்லாருக்குமானது” என்று மொழிந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “நம்பிக்கை மற்றும் அமைதிக்கான ஆதாரமாக அமைந்துள்ள இந்த அனுபவத்தை உலக மக்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்” என்றும் தனது செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments are closed.