கடினமான சூழலை எதிர்கொள்வதில்தான் கிறிஸ்தவர்களின் மகிழ்ச்சி உள்ளது!

கடவுளின் அன்பான பார்வையின் ஒளியில், அவரிடமிருந்து வரும் மனவுறுத்தியுடனும் வலிமையுடனும் ஒவ்வொரு சூழ்நிலையையும் எதிர்கொள்வதில் கிறிஸ்தவரின் மகிழ்ச்சி தங்கியுள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஜூன் 28, இவ்வெள்ளியன்று, வெளியிட்டுள்ள தனது குறுஞ்செய்தியில் இவ்வாறு பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல இன்னல்களுக்கு மத்தியிலும் புனிதர்கள் இந்த மகிழ்ச்சியை அனுபவித்து அதற்குச் சான்றுபகரக் கூடியவர்களாக இருந்தார்கள் என்றும் உரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம்

Comments are closed.