ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா : உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாவோம்!

அன்பு நேயர்களே, உங்கள் அனைவருக்கும் நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது வத்திக்கான் வானொலி. இன்றைய உயிர்ப்புப் பெருவிழாக் குறித்த சிந்தனைகளை நம்மோடு பகிர்ந்துகொள்ளவிருப்பவர் அருள்பணியாளர் M. ஆரோக்கிய ஸ்டீபன்ராஜ். தஞ்சை மறைமாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2013-ஆம் ஆண்டு அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதன் பின்னர் பாளையங்கோட்டை பங்குத்தளத்தின் உதவிப் பங்குத் தந்தையாகவும், நாகப்பட்டினம் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி மற்றும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலயத்தின் நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது தண்டேஸ்வரநல்லூர் பங்குத்தளத்தின் பங்குத்தந்தையாக சிறப்பாகப் பணியாற்றி வருகின்றார். தந்தை அவர்கள் சீரிய சிந்தனையாளர் மற்றும் சிறந்த மறையுரையாளர். பல்வேறு வானொலி நிகழ்ச்சிகளிலும் உரையாற்றியுள்ளார். ‘வழிகாட்டும் அருளொளி’ என்னும் மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இந்த மகிழ்வான வேளையில், உலகெங்கினும் வாழும் வத்திக்கான் வானொலியின் அன்பு நேயர்கள் சார்பாக, நமதாண்டவரின் உயிர்ப்புப் பெருவிழாக் குறித்த சிந்தனைகளை வழங்க அருள்பணியாளர் M. ஆரோக்கிய ஸ்டீபன்ராஜ் அவர்களை அன்புடன் அழைக்கின்றேன்.

Comments are closed.