கல்வாரியில் நம் விசுவாச வேர்கள் ஊன்றப்பட்டுள்ளன

வறண்ட, வளமற்ற கல்வாரியின் தரிசு மண்ணில் நம் விசுவாச வேர்கள் ஊன்றப்பட்டுள்ளன, என மார்ச் 26, வியாழக்கிழமை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எந்த கல்வாரி தரிசு மண்ணில் நம் நம்பிக்கையின் வேர்கள் ஊன்றப்பட்டுள்ளனவோ அங்கு இயேசு தன் மரணத்தின் வழி நம்பிக்கையை துளிர்விடச் செய்தார் என தன் டுவிட்டர் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு வானுலகிற்கு வழி திறந்தார்; அவர் நமக்கு முடிவற்ற வாழ்வை வழங்கினார், நமக்கு மீட்பைக் கொணர்ந்தார் என அதில் மேலும் கூறியுள்ளார்.

இயேசுவின் பாடுகளின் பாதையில் பாதத்தை எடுத்து வைத்து கல்வாரி நோக்கி நாம் பயணம் மேற்கொள்ளும் இந்த புனித வாரத்தில் நம் விசுவாசம் ஊன்றப்பட்டிருக்கும் இடம் குறித்து தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம்

Comments are closed.