இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள் 06.12.2023.

துயர்நிறை மறையுண்மைகள்.

1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,

அதித கன மழையினால் அவதியுரும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,

கடும் மழையினால் இன்னலுரும் வீடற்றவர்கள், ஆதரவற்றவர்கள், முதியோர்கள், உடல் நலன் குன்றியோர் ஆகிய அனைவருக்காகவும் இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

வீடுகளில் மழைநீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கு உணவும், தங்க இருப்பிடமும் கிடைத்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்

“கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்; காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்; நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்; நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்;” என இறைவாக்கினர் எசாயா கூறுகிறார்.

“படைகளின் ஆண்டவரே, நீர் நேர்மையோடு தீர்ப்பிடுபவர்” (எரே 11: 20) என்பார் இறைவாக்கினர் எரேமியா. ஆகையால், மக்களுக்கு நேர்மையோடு தீர்ப்பு வழங்க வரும் ஆண்டவருக்கு உகந்த வழியில் நடந்து அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெற இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,

““நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர். ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை.” என நமதாண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார்.

மத்தேயூ நற்செய்தியில் ‘தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்’ (மத் 5:8) என்பார் இயேசு. ஆகையால், நாம் எளியவர்களாக, தூய்மையான உள்ளத்தினராக வாழ்ந்து, கடவுளைக் காணும் பேற்றை நாமும் பெற இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.