இறை யேசுவின் பிரதிபலிப்பாக, உண்மை துறவிகளாக வாழ அழைப்பு

பிரான்சின் குருத்தவப் பயிற்சி மாணவர்களின் கருத்தரங்கில் பங்குபெறுபவர்கள் ஒவ்வொருவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செபத்தையும், அன்பான நெருக்கத்தையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

திருஅவைகளும் மதச்சார்பற்ற மேற்கத்திய சமூகங்களும் எதிர்கொள்ளும் இக்கட்டான இன்றைய சூழலில், பலருக்கு மத்தியில் இறைவன் அவர்களைத் தேர்ந்தெடுத்து, நேசித்து விடுத்துள்ள அழைப்பிற்கு, பல இளைஞர்கள் தாராள மனதுடனும் துணிச்சலுடனும் இன்னும் தைரியமாக பதிலளிப்பது மகிழ்ச்சிக்கான காரணமாகும் என்ற திருத்தந்தையின் செய்தியை தெரிவித்துள்ளார் கர்தினால் பியத்ரோ பரோலின்.

பிரான்ஸ் நாட்டின் திருஅவைக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொணரும் குருத்தவப் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு  நன்றி தெரிவித்ததோடு, திருஅவையின் தலைவரான கிறிஸ்துவின் தியாகத்திற்கு தங்களை சமர்ப்பித்து, பலிபீடத்தில் அவருடன் ஐக்கியமாகி, முழு கடவுளின் மக்களுக்கு கொடையாக, துறவியராக வாழ திருத்தந்தை அழைப்பு விடுப்பதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

துறவறம் பிரான்சில் அங்கீகரிக்கப்படவில்லை மேலும், இன்று அருள்தந்தையர்களின் உருவம் பெரும்பாலும் சில வட்டாரங்களில் சிதைக்கப்படுகிறது, இக்காலக் கட்டத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கோரப்பட்ட புதிய நற்செய்தி அறிவிப்பைத் தொடர்வதற்கான ஒரே வழி, நெருக்கம், இரக்கம், பணிவு, கருணை, பொறுமை, மென்மை, எளிமை, வறுமை ஆகியவற்றின் ஆயர் பாணியைக் கடைப்பிடிப்பதாகும் எனக்கூறுவதுடன்,  இந்த பாணி புதியது அல்ல, ஆனால் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது இன்று அவசியமாகிவிட்டது எனவும்,  கடவுளின் மக்களுக்கு சாட்சியாக இருப்பதும், கிறிஸ்துவை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதும் அருள்தந்தையர்களின் இன்றியமையாத பங்காகும் எனவும் கர்தினால் பரோலின் அவர்களால் அனுப்பப்பட்ட செய்தியில் தெரிவித்துள்ளார்.

குருத்தவப் பள்ளி மாணவர்கள்,  அர்த்தமுள்ள துறவு வாழ்க்கையை வாழவும், சோதனைகள் மற்றும் சிரமங்களை எதிர்க்கவும், இயேசுவுடன் நெருக்கமான, திடமான மற்றும் உண்மையான தொடர்பைப் பேண வேண்டும் எனவும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இயேசு மட்டுமே போதுமானவராக இருந்தால், அவர்களுக்கு பெரிய உறவுகளின் தொடர்புகளும், இறை ஊழியத்தில் வெற்றி அல்லது மகத்தான ஆறுதல் தேவையில்லை என்வும், அவர்களுக்கு நிதி உடைமைகள், தொழில்கள், புகழ் அல்லது குழப்பமான பாசங்கள் தேவையில்லை என்றும், குருத்தவப் பள்ளி மாணவர்கள், இவ்வழைப்பிற்கு எப்பொழுதும் பதிலளித்து, இயேசுவோடு ஒற்றுமையாக வாழ்வதற்காக அவருடன் தங்கள் பிணைப்பை ஆழப்படுத்த வேண்டும் எனவும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.