கடவுளுக்கு மிகவும் பிடித்தமானவர்கள் ஏழைகள்

ழைகள் திருஅவையின் கொடை, அவர்கள் கடவுளுக்கு மிகவும் பிடித்தமானவர்கள் என்றும், நமக்காக ஏழையாகப் பிறந்த கிறிஸ்துவின் இரக்கம் ஏழைகளுக்கானப் பாதையில் நம்மை வழிநடத்துகின்றது என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 13 திங்கள் கிழமை இவ்வாறு தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமடலின் வார்த்தைகளான “நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார் என்ற வரிகளையும் நினைவுகூர்ந்துள்ளார்.

கடவுளால் அதிகமாக அன்பு செய்யப்பட்டவரும் நமக்காக ஏழையானவருமான இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியானது ஏழைகள் நோக்கிய பாதையில் நம்மை வழிநடத்துகின்றது என்றும், ஏழைகள், ஓரங்கட்டப்பட்டவர்கள், வெறுத்து ஒதுக்கப்பட்டவர்கள், பலவீனமானவர்கள், பாதுகாப்பற்றவர்கள் ஆகிய அனைவரும் திருஅவையின் கொடைகள், கடவுளுக்கு மிகவும் பிடித்தமானவர்கள் என்றும் தனது டுவிட்டர் குறுஞ்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.