இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.

1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,

இந்த வாரம் முழுவதும் நம்மைத் தூய ஆவியின் துணைகொண்டு வழி நடத்திய நம் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,

ஐந்து காயங்களால் உடல் வேதனை மட்டுமின்றி மனரீதியாகவும் இன்னல்களை சந்தித்த புனித பியோ மன அழுத்த நிவாரணத்துக்கு (stress relief) பாதுகாவலராவார்.

தாங்கள் ஏற்ற இறைப்பணியின் நிமித்தம் மன அழுத்தத்தில் இருக்கும் எண்ணற்ற அருட்பணியாளர்கள் அவற்றிலிருந்து விடுபட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,

“கிறிஸ்து தோன்றும் வரையில் குறைச் சொல்லுக்கு இடந்தராமல் இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா..” என திருத்தூதர் பவுல் கூறுகிறார்.

ஆண்டவரின் வருகைவரை நாம் அனைவரும் அப்பழுக்கின்றி வாழ்ந்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,

“இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன.” என நமதாண்டவர் இயேசு உவமைகளை கூறுகிறார்.

நாம் நல்ல நிலத்தில் விழுந்த விதைகளாக நூறு மடங்கு விளைச்சலைத் தந்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,

நாளை ஞாயிற்றுக் கிழமை முழுத் திருப்பலியில் நாம் ஆண்டவரின் திருவுடலை பெற தகுதிபெறும் பொருட்டு நம்மையே நாம் முழுமையாகத் தாயாரித்துக் கொள்ள வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.