சான்றுபகர்தல் வழியாகவே நம்பிக்கை வளர்கிறது : திருத்தந்தை

நற்செய்தியின் சுடரையும், மீட்பர் இயேசுவினுடைய அன்பின் மகிழ்ச்சியையும், அவருடைய வாக்குறுதியின் நம்பிக்கையையும் கொண்டு வந்த சான்றுகள் வழியாக,  நம்பிக்கையானது வாழ்க்கையின் மூலம் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 27, இப்புதனன்று வெளியிட்டுள்ள தனது குறுஞ்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சான்று பகிர்தல் வழியாகவே நம்பிக்கை வளர்த்தெடுக்கப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.