இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

ஒளி நிறை மறையுண்மைகள்.

1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,

“எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகின்றேனோ அவற்றைச் சொல்.” (எரே. 1: 7)-ல் ஆண்டவர் கூறுகின்றார்.

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில் நாம் வாசித்தது போல நான் அனைவரும் பிறருக்கு இறைவார்த்தையை எடுத்துரைக்கும் சிறந்த கருவிகளாக விளங்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,

இயேசு தம் சீடர்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போன்று, எல்லாவற்றையும் நமக்குக் கற்றுத்தருகின்றார்.

கடவுள் நமக்குக் கற்றுத்தருவதை பிறருக்கு நாம் கற்றுத்தரும்போதுதான் கற்பது முழுமைபெறுகின்றது என்பதை உணர்ந்து செயல்பட இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,

மக்களைப் பாதிக்கும் கடுமையான இந்த கோடை வெப்பம் தணிய இறைவன் நல்ல மழையைத் தந்தருள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,

இன்றையப் புனிதரான லூக்கா நகர் புனித ஸிட்டா பாலியல் வன்முறைக்குள்ளானவர்களின் பாதுகாவலியாவார்.

பாதிக்கப்பட்ட இளம் பெண்களின் உடல், உள்ள சுகத்திற்காகவும், அவர்கள் அதிலிருந்து மீண்டு புதிய வாழ்வினை நம்பிக்கையோடு துவக்கவும் இப்புனிதர் வழியாக மன்றாடுவோம்.

பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,

குழந்தை இயேசுவுக்கும், புனித யூதா ததேயுவிற்கும் ஒப்புக் கொடுக்கப்பட்ட வியாழக்கிழமையான இன்று நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

Comments are closed.