குருத்தோலை ஞாயிறு உலகின் தாழ்மையின் ராஜா

அன்பிற்குரியவர்களே! தவக்காலத்தின் இறுதி வாரமாகிய புனித வாரத்தின் தொடக்க நாள் –  குருத்து ஞாயிறு திருவழிபாட்டு கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.

‘ஓசன்னா’ என்று ஓலமிடும் இதே கூட்டம்  ‘சிலுவையில் அறையும்’ என்று கூக்குரலிடும் என்று தெரிந்தும், கழுதையின் மேல் கம்பீரமாக ஏறி எருசலேம் நோக்கி தன் பவனியை தொடர்கிறார் இயேசு.

            இயேசுவின் குருத்தோலை பவனி, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற தயாராக இருக்கும் அவரின் வெற்றிப் பவனி. இந்த பவனியில் அன்று வியாபாரச் சந்தையாக கிடந்த எருசலேம் ஆலயத்தை தூய்மையாக்கி அழகுபடுத்தியவர், இன்று அதே எருசலேம் ஆலயத்திற்குள் அரசராக அடி எடுத்து வைக்கிறார்.  இன்று நாம் கொண்டாடும் குருத்து ஞாயிறு இயேசுவின் உயிர்ப்பு ஞாயிறு கொண்டாட்டத்திற்கான தயாரிப்பு என்பதை உணர்வோம்.  பசுமை நிறத்துடன் செழுமையாக காட்சியளிக்கும் குருத்தோலை , நம் துன்பத்திலிருந்து நம்மை துளிர்விட்டு எழச்செய்யும் நம்பிக்கை ஓலை ஆகட்டும்.

           வாருங்கள்! குருத்தோலை ஏந்தியவர்களாக இயேசுவின் வெற்றி பவனியில் பங்கெடுத்து எருசலேம் ஆலயத்துக்குள் செல்வோம், இயேசுவின் வெற்றிப்பவனி 40 நாட்களாக நாம் மேற்கொண்ட எல்லா தவ முயற்சிகளிலும் வெற்றியை தரட்டும்! புனித வாரம் நம்மை இயேசுவின் பாடுகள் வழியாக புனிதப்படுத்தட்டும்.

Comments are closed.