ஒரு நாடு ஒரே சட்டம் எனும் இலங்கை அரசின் புதிய அரசியல் யாப்பு நாட்டை மீளவும் நெருப்பில் தள்ளும் முயற்சி

 

ஒரு நாடு ஒரே சட்டம் எனும் இலங்கை அரசின் புதிய அரசியல் யாப்பு தொடர்பான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை கடந்த 02ஆம் திகதி வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஆளும், எதிர்க்கட்சி, கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்களின ; சந்திப்பை தொடர்ந்தே இவ்வறிக்ககை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் நாட்டில் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள சரிவுகள் பற்றி தமது அக்கறையை வெளிப்படுத்தி, ஐனாதிபதியும், தற்போதைய அரசும் தேர்தலுக்கும் முன்னும் பின்னும் கூறியது போலன்றி, புனிதமற்ற சூழ்ச்சியான விடயங்களை உள்ளடக்கி 20ஆம் சட்ட திருத்தந்தை கொண்டு அமைக்கப்படும் புதிய அரசியல் யாப்பு நாட்டை மீளவும் நெருப்பில் தள்ளும் முயற்சியாகும் என்பதனையும் சுட்டிக்காட்டி இது நாட்டின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் விதத்தில் எல்லையை மீறி செயல்படுகின்றது என்பதனையும் வலியுறுத்தியுள்ளனர். அரசியலமைப்புக்கு அமைவாக நிர்வாகத்தில் ஒரு நாடு ஒரே சட்டம் என்பதை யாரும் எதிர்க்கவில்லை இருப்பினும் தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு மாறாக தெரிவு செய்யப்பட்ட சில தனிநபர்களைக் கொண்டு விசேட வர்த்தமாணி ஊடாக அறிவிக்கப்படும் ஐனாதிபதி செயலனி ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்பதுடன் பாராளுமன்ற நடைமுறை புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகவும் கவலைக்குரியது.
மேலும் தமிழர், இந்துக்கள், கத்தோலிக்கர், கிறிஸ்தவர் எனும் சிறுபான்மை குழுக்கள் மேற்படி செயலனியில் புறக்கணிக்கப்பட்டுள்ளமை செயலனியின் ஆய்வுகளை அர்த்தமற்றதாக்கும் என்பதுடன் தனிநபருடைய கடந்தகால செயற்பாடுகளையும் அவரின் பின்புலத்தைக் கவனியாமல் தலைமைக்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை தலைமை பொறுப்பை அவமதிப்பதாகும்.
எது எவ்வாறாயினும் குறித்த வர்த்தமாணி மீள பெறப்பட்டு அனைத்து பிரசைகளும் சட்டத்தின் முன் சமமாக மதிக்கப்படும் யாப்பு உருவாக்க வேண்டும் என்பதே எமது கருத்தாகும் எனவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.