20 திகதி சனிக்கிழமையை போரினால் இறந்தவர்களுக்காக மன்றாடுகின்ற சிறப்பு நாள் – வடக்கு கிழக்கு ஆயர்கள்

இவ்வறிக்கையில் 30 வருடகால உள்நாட்டு போரில் மக்கள் கடந்துவந்த துன்பியல் நிகழை;வுகளை குறிப்பிட்டு போரில் இறந்துபோன உறவுகளைக்கூட தமிழ் மக்கள் சுதந்திரமாக நினைவுகூர முடியாமல் இருக்கும் தற்போதைய நிலையையும் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் இவ்வறிக்கையில், ஒவ்வொரு வருடமும் இந்நாளை சிறப்பாக நினைவு கூர உதவியாக கார்த்திகை மாதத்தில் மூன்றாவது வாரத்தில் வரும் சனிக்கிழமையை இந்நாளுக்காக ஒதுக்கி போரில் இறந்தவர்களை அனைவரும் இணைந்து நினைவுகூர அழைப்பும் விடுத்தள்ளனர்.
இதன்படி இம்மாதம் 20 திகதி சனிக்கிழமையை போரினால் இறந்தவர்களுக்காக மன்றாடுகின்ற சிறப்பு நாளாக சிறப்பிப்போம் என்றும் அன்றைய தினம் போரில் ஈடுபட்ட தரப்பினர், போரினால் இறந்துபோன மதத்தவைர்கள் அரசியல்வாதிகள், அரச பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளில் மக்கள் ஈடுபடவும் இல்லங்களில் தீபம் ஏற்றி இறைவேண்டல் புரியவும் அழைப்பு விடுத்துள்ளனர். அத்துடன் இவ்வழைப்பை வடக்கு – கிழக்கு கத்தோலிக்க ஆயர்களாக நாம் எம்மக்களுக்கு விடுத்தாலும் சமயங்களைக் கடந்து அனைத்து சமயத் தலைவர்களையும், தமிழ்கூறும் நல்லுலகையும் இந்நிகழ்வில் இணைந்துகொள்ளும்படி அன்போடு அழைத்து நிற்பதோடு இந்த முன்னெடுப்பு வெற்றியளிக்க அனைவரது ஆதரவையும் இவ்வறிக்கையில் இவர்கள் வேண்டியுள்ளனர்.
Comments are closed.