செபமாலை தியானிக்கும் ஆன்மாக்களுக்கு தேவமாதாவின் 15 வாக்குறுதிகள்.

1. செபமாலை செபிப்பவர்கள் எனது மக்கள். எனது ஒரே மகன் சேசுவின் சகோதர சகோதரிகளாயிருப்பர்.
2. செபமாலை செபித்து அதன் வழியாக நீங்கள் கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வீர்கள்.
3. செபமாலையின் மீது பக்தியுள்ள ஆன்மாக்களை உத்தரிக்கிற நிலையில் வேதனையினின்று மீட்பேன்.
4. செபமாலையை உண்மையுடன் செபிப்பவர் இவ்வுலக வாழ்விலும், இறக்கின்ற வேளையிலும் சர்வேசுரனின் ஒளியையும், அவரது திருவருளின் பெருக்கினையும் அடைவர்.இறக்கும் வேளையில் மோட்சத்தில் அர்ச்சியசிஷ்டவர்களோடு பேரின்பத்திலும் பங்கு பெறுவர்.
5. தேவ இரகசியங்களை தியானித்து பக்திப் பற்றுடன் செபமாலை செபிப்பவர்கள் அகால மரணத்திற்கு ஆளாக மாட்டார்கள். சர்வேசுரன் அவர்களைத் தண்டிக்க மாட்டார். அருள் நிலையில் வாழ்ந்து மோட்ச வாழ்விற்குத் தகுதி பெறுவார்கள்.
6. செபமாலை செபிப்பவர் பரிசுத்த வாழ்விலும், நற்செயல்களிலும் வளர்வர். செபமாலை உலகப் பற்றுதல்களிலிருந்தும், அதன் நிலையற்ற பொருள்களிலிருந்தும் ஆன்மாவை விடுவித்து மோட்சத்தை நோக்கி அதனை உயர்த்துகிறது.
7.செபமாலை செபிப்போர்க்குச் சிறப்பான பாதுகாப்பையும், மாபெரும் அருள் வரங்களையும் வாக்களிங்கிறேன்.
8. செபமாலை நரகத்திற்க்கு எதிரான கவசம் இது தீமைகளை அழிக்கிறது.
9. செபமாலையின் மீது உண்மையான பக்தி கொண்டிருப்பவர்கள் திருச்சபையின் திருவருட் சாதனங்களை பெறாமல் சாகமாட்டார்கள்.
10. செபமாலை பக்தியைப் பரப்புகிறவர்கள் என்னிடமிருந்து தங்கள் தேவைகளில் உடனே உதவி பெறுவர்.
11. செபமாலை பரப்புகிறவர்களுக்கு அவர்கள் வாழ்நாளிலும், இறக்கும் வேளையிலும் பரலோக நீதிமன்றம் முழுவதும் அவர்களுக்காக பரிந்து பேச எனது திருமகனிடமிருந்து அனுமதி பெற்றுள்ளேன்.
12. செபமாலையை விடாமல் தொடர்ந்து செபிப்பவர்கள் சில விசேச வரங்களை என்னிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள்.
13. செபமாலையின் வழியாக தங்களை என்னிடம் ஒப்படைக்கிறவர்கள் என்றுமே அழிவுறமாட்டார்கள்.
14. என் செபமாலையின் உண்மை புதல்வர்களாய் இருப்பவர்கள் பரலோகத்தில் மிகுந்த மகிமை அடைவார்கள்.
15. என் செபமாலை மேல் பக்தி கொண்டிருப்பது மோட்சம் செல்வதற்க்கு ஒரு பெரிய உறுதிப்பாடாகும்.
தொடரும்….

Comments are closed.