இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
பிறந்த இப்புதிய மாதம் முழுவதும் நம் தேவன் நம்மைக் கண்மணி போலக் காத்து வழி நடத்திட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி முதல் வாசகத்தில், “ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய். ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து, விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன்.” என ஆண்டவரின் தூதர் ஆபிரகாமிடம் கூறுவதை காண்கிறோம்.
ஆபிரகாமிடமிருந்து ‘ஆண்டவருக்குக் கீழ்படிதல்’ என்ற உயரிய பண்பினை நாம் கற்றுக் கொள்ள இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில், “இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, துணிவோடிரு, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.” என வாசிக்கின்றோம்.
நமது நம்பிக்கையைக் கண்டு, இறைவன் இரக்கமுற்று நம் அனைவரையும் குணமாக்குவார் என நாம் முழு நம்பிக்கைக் கொள்ள இந்த முதல் மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
பல இன்னல்களுக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து எண்ணற்ற மக்களுக்கு மறைபரப்பு பணியை திறம்பட மேற்க் கொண்ட இன்றைய புனிதர் ஜுனிபெரோ செர்ராவை திருச்பைக்குத் தந்த இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று நமது குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காக குழந்தை இயேசுவிடம் வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.