இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
மாதாவின் வணக்க மாதத்தில், 17.05.2021 இன்று,
அனைத்து உலகத் தலைவர்களுக்கும், சர்வதேச அமைப்புகளின் அனைத்து தலைவர்களுக்கும் செபிப்போம். முக்கியமாக அவர்களில் தொற்று நோய்க்கு உள்ளான அனைவரும் பரிபூரண சுகம்பெற வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
தங்களது இறைப்பணியின் நிமித்தம் தொற்றுநோய்க்கு உள்ளான ஆயர்கள், அருட்தந்தையர்கள், அருட்கன்னியர்கள் அனைவரும் பரிபூரண சுகம்பெற வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
ஊரடங்கு உத்தரவினால் தினக்கூலி வருமானத்தை இழந்து நிற்கும் அனைத்து தொழிலாளர்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும் இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
இந்தியாவிலும், பிற நாடுகளிலும் மறுபடியும் வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும், இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.