யாழ். புனித மரியன்னை பேராலயத்ததின் 2020ம் ஆண்டு திருவிழாவிற்கான நவநாள் ஆரம்பமாகியது.

யாழ். மறைமாவட்ட ஆயரின் வதிவிட ஆலயமும் யாழ். மறைக்கோட்டத்திற்கு உட்பட்ட ஆலயமுமாகிய யாழ். புனித மரியன்னை பேராலயத்ததின் 2020ம் ஆண்டு திருவிழாவிற்கான நவநாள் வழிபாடுகள் இன்றைய தினம் (06/08/2020) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
கொஞ்சேஞ்சி மாதாவின் உருவம் தாங்கிய பேராலயக் கொடியினை பேராலயப் பங்கின் புதிய பங்குத்தந்தை அருட்பணி மெளலிஸ் அடிகளார் ஏற்றி வைத்தார்.
கொடியேற்றல் நிகழ்வினை தொடர்ந்து திருச்செபமாலையும், திருப்பலியும் இடம்பெற்றது.
இன்றைய திருப்பலியினை அமல மரித் தியாகிகள் சபையை சார்ந்த அருட்தந்தை சுரேன் அடிகளாருடன், பேராலயப் பங்குத்தந்தை அருட்பணி மெளலிஸ் அடிகளார்
மற்றும் பேராலய உதவிப் பங்குத்தந்தை ஜோன் குரூஸ் ஆகியோர் இணைந்து ஒப்புக் கொடுத்தனர்.

Comments are closed.