அரச சுகாதார நடைமுறையை கவனத்தில் கொண்டு ஆடி மாத மருதமடு பெருவிழா திருப்பலி மட்டுமே நடைபெறும். மன்னார் ஆயர்

கொனோரா நோயின் சுகாதார நடைமுறையை கவனத்தில் கொண்டு மன்னார்
மறைமாவட்டத்திலுள்ள யாத்தரிகர் ஸ்தலமாகவும் அரச வர்த்தகமானியின் பிரகாரம் நடைபெற்றுவரும் மருதமடு அன்னையின் ஆடி மாத பெருவிழாவானது திருவிழா திருப்பலியுடனே மட்டும் நடைபெறும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.
அரச வர்த்தமானிக்கமைய மன்னார் மறைமாவட்ட மருதமடு அன்னையின் ஆடி மாத பெருவிழா தொடர்பாக புதன் கிழமை (10.06.2020) மன்னார் மாவட்ட அரசாங்க
அதிபர் சீ.ஏ.மோகன்றாஸ் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்
இடம்பெற்றது.
இவ் கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ
ஆண்டகை, மடு பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார், குரு முதல்வர்
ஏ.விக்ரர் சோசை அடிகளார், மன்னார் மேலதிக அரச அதிபர் குணபாலன் உட்பட
பாதுகாப்பு அதிகாரிகள், சுகாதார மற்றும் முக்கிய திணைக்கள அதிகாரிகள்
கலந்து கொண்டனர்.
இவ் கூட்டத்தை தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல்
பெனாண்டோ ஆண்டகை ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் மன்னார் மறைமாவட்டதில் அமைந்துள்ள மருத மடு அன்னையின் எதிர்வரும் ஆடி மாத இரண்டாம் திகதி (02.07.2020) நடைபெற இருக்கும் வருடாந்த
ஆலய விழாவைப்பற்றி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையின் கீழ் நாம்
கலந்தாலோசித்தோம்.
தற்பொழுது நாட்டில் நிலவியுள்ள கொனோரா வைரஸ் நோய் அச்சுறுத்தல்
காரணமாக இவ் விழா கொண்டாடுவதில் நாம் சுகாதார விடயத்தில் மிக கவனமாக
இருக்கும் இந் நிலையில் இருக்கின்றோம்.
தற்பொழுது உள்ள சூழ் நிலையில் ஆடி மாதம் 02 ம் திகிதி அன்று மட்டும்
திருவிழா திருப்பலியை நடாத்த இருக்கின்றோம். இவ் திருவிழா திருப்பலியை தொலைகாட்சிகள் ஊடாக பக்தர்கள் கண்டு கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன
.
இதன் மூலம் பக்தர்கள் தொலிக்காட்சிகள் ஊடாக இவ் திருப்பலியில் பங்குபற்றி
மரியன்னையின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளலாம்.
கடந்த காலங்களில் நீங்கள் உங்கள் வீடுகளிலிருந்து செப வழிபாடுகளில்
கலந்து கொண்டுள்ளீர்கள். ஆகவே மருத மடு அன்னையின் இவ் திருவிழா
நாட்களிலும் நீங்கள் வீடுகளிலிருந்து செபிப்பதுடன் திருச்சுரூப ஆசீரையும்
பெற்று நோய் நொடியிலிருந்து பாதுகாக்கப்பட மருத மடு அன்னை பாதுகாப்பாள்
விஷேடமாக இவ் திருவிழா அன்று எம் நாட்டுக்காக மருத மடு அன்னையிடம் வேண்டி நிற்போம் என தெரிவித்தார்.

Comments are closed.