இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள் 21.05.2020

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
உயிர்த்த கிறிஸ்து உலக மக்களுக்கு நோய்த் தொற்றிலிருந்து விடுதலையைத் தந்தருள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இந்த ஊரடங்கு உத்தரவிலும் தொற்று பரவும் வேகம் அதிகரிப்பது மக்களிடையே மிகுந்த அச்சத்தையும் கவலையை ஏற்படுத்துகிறது. கூடிய விரைவில் அவை நீங்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
நோய்த் தொற்று ஏற்ப்பட்ட அனைத்து மக்களும் நேர்மறை சிந்தனையோடு இந்த நோயை வெல்ல மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
பாத்திமா அன்னை காட்சியில் மக்கள் மனமாற்றத்திற்காக செபமாலை செபிக்கச் சொன்னதை நாம் அனுதினமும் பின்பற்ற இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
தொற்று பரவும் வேகத்தை பெறுமளவு கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து அதை அமுல்படுத்துவதற்குத் தேவையான ஞானத்தை தூய ஆவியானவர் அளித்திட இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.