முள்ளிவாமுள்ளிவாய்க்கால் நினைவு நாள் : தமிழர் தாயகம் எங்கும் நிகழ்வுகள்ய்க்கால் நினைவு நாள்

இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உச்சகட்ட இனவழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் தினம் தமிழர் தாயகம் எங்கும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ளன. இன்றைய தினம் கருப்பு கொடிகளை கட்டி துக்க தினமாக அனுஸ்டிக்குமாறும் பொது அமைப்புக்கள், கட்சிகள் என்பன கோரியுள்ளன.

வன்னியில் நடைபெற்ற யுத்தத்தில் பல இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டு இந்த வருடத்துடன் எழு ஆண்டுகள் நிறைவுறுகின்றன. இதில் கொல்லப்பட்ட ஒட்டுமொத்த தமிழ் மக்கள் நினைவாக பொது நினைவு தினமாக மே 18 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டு அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.

இதனை தாயகத்திலுள்ள தமிழ் மக்களும் புலத்திலுள்ள தமிழ் மக்களும் தமது உறவுகள் நினைவாக அனுஷ்டித்து வருகின்றன. குறிப்பாக தாயகத்தில் உள்ள கட்சிகளான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஆகிய கட்சிகளும், வடக்கு மாகாண சபை, யாழ்.பல்கலைக்கழகம், தமிழ் சிவில் சமூக அமையம் ஆகியனவும் பரந்தளவில் அனுஷ்டித்து வருகின்றன.

Comments are closed.