கொரோனா வைரஸ் மருந்து தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியது ஐநா

கொரோனாவைரசிற்கு எதிராக எதிர்காலத்தில் உருவாக்கப்படும் மருந்தினை உலக நாடுகள் அனைத்தும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என  ஐநா தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ள அதேவேளை இந்த தீர்மானத்தினை தடுப்பதற்கு முயற்சி செய்த அமெரிக்கா தோல்வியடைந்துள்ளது.

கொரோனா வைரசிற்கு எதிராக எதிர்காலத்தில் உருவாக்கப்படும் எந்தவொரு தடுப்பு மருந்தினையும் சமமான ,தக்கதருணத்தில், திறமையான முறையில் பெற்றுக்கொள்வதை உறுதி செய்யவேண்டும் என மெக்சிக்கோ கொண்டுவந்த தீர்மானத்தினை ஐநாவின் 193 நாடுகள் ஆதரித்துள்ளன.

அதனை தடுப்பதற்கு அமெரிக்கா முயன்றதாகவும் எனினும் அது சாத்தியமாகவில்லை எனவும் ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

ஐநா தீர்மானத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் முக்கிய பணி குறித்து குறிப்பிடப்பட்டிருந்ததை அமெரிக்காவை சீற்றமடையச்செய்ததாகவும் ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட தீர்மானத்தின் மீதான வாக்களிப்பு இடம்பெற்று மூன்று மணித்தியாலத்தின் பின்னரே தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் இது வழமைக்கு மாறானது என ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

Comments are closed.