பாடசாலைகள் மீள மே மாதம் 11ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது
2020ம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் மே மாதம் 11ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக, எதிர்வரும் 20ம் திகதி இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவிருந்தன.
எனினும், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, இரண்டாவது தவணைக்கான கல்வி நடவடிக்கைகளை மே 11ம் திகதி ஆரம்பிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலையடுத்து கடந்த மாதம் 12ம் திகதி அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.