ஆண்டவர் இயேசு சிலுவையடியில் தனது தாயை தனிமனிதனுக்கு தந்தாரா?

ஆண்டவர் இயேசு சிலுவையடியில் தனது தாயை தனிமனிதனுக்கு தந்தாரா???
உலகில் உள்ள அவரின் அன்பான சீடர்களுக்கு தந்தாரா???
யார் இந்த யோவான்??
யோவான் உறவு முறையில் ஆண்டவர் இயேசுவின் சகோதரர் ஆவார்..
*மத்தேயு – 4;21
அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான #யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார்
ஒருவர் இறக்கும் தருவாயில் தனக்கு பிடித்தவர்களுக்கு தன் சொத்தை உயில் எழுதுவது மரபு..
அதைத்தான் ஆண்டவர் இயேசு செய்தார்..
உறவு முறையில் ஆண்டவர் இயேசுவின் தாய் மரியன்னையின் சகோதரிகள் இருந்ததாக விவிலியமும் சொல்கிறது ஆண்டவர் சொல்லாமலேயே அவர்கள் அன்னைமரியாவை கவனிப்பார்கள்..
யாக்கோபு, யோவான் யூதா சிமோன் என்ற உறவுமுறை சகோதரர்கள், ஆண்டவர் இயேசுவின் சீடர்களே,
இவர்களும் ஆண்டவர் இயேசு சொல்லாமலே அன்னையை கவனித்திருப்பார்கள்..
*யோவான் – 19:26-27
இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார்.
பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.
இங்கு யோவான் உறவுமுறையில் சகோதரனாக இருந்தும் அவரை அன்பான சீடரிடம் ஒப்படைத்தார் என்று விவிலிய வார்த்தை உள்ளது.
*இதில் மறைந்துள்ள மறையுண்மைகள்
***அன்னைக்கு வேறு பிள்ளைகள் இல்லை
***உறவு முறையை விவிலியத்தில் சுட்டிகாட்டவில்லை
அன்பான சீடன் என்ற உலகில் உள்ள பொதுவானவர்களுக்கு அந்த தன்னிகரற்ற ஆண்டவர் 33 ஆண்டுகள் பெற்றுக்கொண்ட தாய்மை பண்பு உலகில் உள்ள ஆண்டவர் இயேசுவின் சீடர்களுக்கு தரபட்டது..
அன்னை மரியாழ் உலகோரின் தாய் என்ற பந்தம் உலகம் முடியும் வரை தொடரும்
அந்த பந்தம் ஒவ்வோர் கத்தோலிகருடைய உணர்விலும் உயிரிலும் கலந்திருக்கும்..
ஆண்டவர்இயேசுவுக்கு நன்றியும் புகழும்

Comments are closed.