திருத்தந்தையின் தவக்காலச் செய்தி

‘கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்’ (2 கொரி.5:20), என்ற புனித பவுலின் வார்த்தைகளை தலைப்பாகக்கொண்டு இவ்வாண்டின் தவக்காலச் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நான்கு உபதலைப்புக்களுடன் தன் செய்தியை இத்திங்களன்று வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘மனமாற்றத்தின் அடிப்படையாக பாஸ்கா மறையுண்மை’ என்ற தலைப்பின் கீழ், சிலுவையில் தொங்கும் இயேசுவின் விரிந்த கரங்களில் பார்வையை செலுத்தி, நாம் மீட்கப்பட அனுமதிப்போம் எனவும், ஒப்புரவு அருளடையாளத்தில் நம்பிக்கைக்கொண்டு, நம் குற்ற உணர்வுகளிலிருந்து விடுதலைபெறுவோம் எனவும், அதில் விண்ணப்பித்துள்ளார்.

தவக்காலத்தில், செபத்தின் முக்கியத்துவம் குறித்து, ‘மனமாற்றத்தின் அவசரம்’ என்ற இரண்டாவது உப தலைப்பின் கீழும், தன் குழந்தைகளுடன் உரையாடலை மேற்கொள்ளும் இறைவனின் பேரார்வ விருப்பம் குறித்து மூன்றாவது தலைப்பின் கீழும், விவரித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பாஸ்கா மறையுண்மையை நம் வாழ்வின் மையமாக வைப்பது என்பது, இயேசுவின் காயங்களின் வழி நாம் காணும் மக்களின் துன்பங்கள் குறித்து இரக்கம் கொள்கிறோம் என்பதையும் குறித்து நிற்கிறது என, ‘நமக்கென வைத்திருப்பதற்கல்ல, மாறாக, மற்றவர்களுடன் பகிர்வதற்குரிய செல்வம் இது’ என்ற நான்காவது பகுதியிலும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

Comments are closed.