பிப்ரவரி 4, உலக புற்றுநோய் விழிப்புணர்வு நாள்

வருமானம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில், புற்றுநோயாளிகளுக்கு, சிகிச்சைகள் அதிகரிக்கப்படவில்லையெனில், அடுத்த இருபது ஆண்டுகளில், உலக அளவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை, அறுபது விழுக்காடு உயரக்கூடும் என்று ஐ.நா. நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்த நாடுகள், புற்றுநோயாளிகளுக்கு, பொதுவான நலவாழ்வு அமைப்புகள் வழியாக வழங்கும் சிகிச்சைகள் 15 விழுக்காட்டுக்கும் குறைவே என்றும், அதேநேரம், பணக்கார நாடுகள், வழங்கும் சிகிச்சைகள் 90 விழுக்காட்டுக்கும் அதிகம் என்றும் ஐ.நா. கூறியுள்ளது.

புற்றுநோய் சிகிச்சைகளை தீவிரப்படுத்தினால், அடுத்த பத்தாண்டுகளில் குறைந்தது 70 இலட்சம் பேரின் வாழ்வைக் காப்பாற்ற முடியும் என்று, WHO எனப்படும் உலக நலவாழ்வு அமைப்பின் இயக்குனர் Tedros Adhanom Ghebreyesus அவர்கள் கூறினார்.

பிப்ரவரி 4, இச்செவ்வாயன்று, உலக புற்றுநோய் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இக்காலத்தில் பல்வேறு வகை புற்றுநோய்களால், உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் 90 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் பாதிப்பேர், அவர்கள் வாழும் பகுதியில் நிலவும் சராசரி ஆயுள்காலத்தைவிட குறைந்த வயதில் இறக்கின்றனர்

Comments are closed.